மூடு மந்திரம் (தொடர் கதை 15)

இரவு ஒரு வித அமைதியை தருவதை இரவை நேசிப்பவர்களால் உணர முடியும். காலையிலிருந்து வியர்வை சொட்ட சொட்ட உழைத்தவர்களுக்கு இரவு தரும் அமைதியை புரிய முடியும்.. மயில்சாமி புரிந்து கொண்டான்.....ஏற்கனவே பேசியபடி ஆராய் பாட்டி செய்து கொடுத்த பணியாரத்தையும் கார சட்னியையும் தூக்கு போசியில் போட்டுக் கொண்டு மருத்துவமனை வந்து விட்டிருந்தான் மயில்சாமி... கீழே மெர்க்குரி லைட் வெளிச்சத்தில், அந்த மருந்த்துவமனை வளாக மரத்திடியில் காத்திருக்க சித்தியின் கை பிடித்து மெல்ல மெல்ல நடந்து வந்தாள் அனகா....

தத்தி தத்தி நடந்து பழகும் குழந்தை என கண்கள் கண்டது... புன்னகைத்தான்..... அவளும் தான்.... இடம் பார்த்து அமர்ந்தார்கள்....
பார்த்துக் கொண்டே சிரித்தாள், கண்கள் பெரிதாக்கிய அனகா.....

கண்ணை பாரு ஆம்லேட்டே போடலாம்....

.............. உள்ளுக்குள் சொன்னதை அடக்கி விட்டு, ஆராய் பாட்டி செய்யற பணியாரம் சாப்பிட தவம் கிடக்கணும்....எங்க பாட்டியோட கைப் பக்குவம் அப்படியே இருக்கும்...

பேசிக் கொண்டே மூவருக்கும் தட்டில் எடுத்து வைத்து சட்னி ஊற்றினான் மயில்.....

அனகாவும் சித்தியும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்... சாப்பிட சாப்பிட அனகா அழ ஆரம்பித்து விட்டாள்.....

என்னாச்சு அனகா ..... எல்லாருக்கும் சோதனை வரதுதான்.. அதுக்காக அதையே நினைச்சுகிட்டு இருந்தா வாழ முடியுமா..... உங்களுக்காது அம்மா, சித்தி இருக்காங்க.. எனக்கெல்லாம் யாரு இருக்கா..... சொல்லுங்க... அப்பிடியே லேசா எடுத்துக்கணும் வாழ்க்கைய... மனச திடமா வைங்க. எது வேணுன்னாலும் கேளுங்க. எல்லாம் சரி ஆகிடும்..ஆறுதல் சொல்லிக் கொண்டே எட்டு பணியாரம் முடித்திருந்தான்.... அனகா, நாளோடு முடித்திருந்தாள் ... இன்னும் இரண்டு எடுத்து அவள் தட்டில் வைக்க, அவள் வேண்டாம் என்க, இவன் வேணும் என்க....
சித்தி மெல்ல எழுந்து பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்கத்துக்கு பெட்காரர்களிடம் சென்று அமர்ந்து கொண்டது சிரித்தபடியே.....

இன்னும் ஒரு வாரத்தில் டிச்சார்ஜ் ஆகி விடலாம் என்று டாக்டர் சொன்ன செய்தியை மயிலிடம் சொன்னாள் .....
நல்ல விஷயம், ........................இப்ப நல்லா நடக்க முடியுதுளல்ல ................ தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போன மாரி .... எல்லாம் கெட்ட கனவா மறந்துடுங்க.. புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றான்....

ஆரம்பிக்கலானா.. ...............!

கழுத்தை ஒரு புறமாக சாய்த்து புருவம் தூக்கி கேட்டாள் அனகா..... வலி மறந்து.....பின்
இது கடைசி பணியாரம்.. உனக்கு பாதி எனக்கு பாதி என்று எச்சில் கையோடு பிட்டு வைத்து விட்டு தனக்கான பாதியை சாப்பிட ஆரம்பித்தாள்....

மயிலும் சிரித்தபடியே சாப்பிட ஆரம்பித்தான்.....

எழுதியவர் : கவிஜி (24-Jul-13, 11:21 am)
பார்வை : 645

மேலே