!!!===((( துளிப்பா )))===!!!
சுனாமி எச்சரிக்கை.
கடற்கரை தப்பியது,
காதலர்களிடமிருந்து.
@@@@@@@@@@@@
கடற்தாயின் பிள்ளைகள்
கடைத்தெருவில் விற்ப்பனைக்கு
மீன்.....மீனே.......
@@@@@@@@@@@@
மணவறையில் காதலி,
மயானத்தில் காதலன்,
எங்கே காதல் ?
@@@@@@@@@@@@
செல்லப் பிள்ளைகளுக்கு
செல்வம் அதிகமானதால்,
காப்பகத்தில் தாய்
@@@@@@@@@@@@
நடுவானில் சாகசம்
அந்தரத்தில் தொங்கியது,
நிலா...........