நிலா மடியில் ஓர் இரவில்
சூரியன் சுடுவதற்கு
காரணமுண்டு
இந்த நிலவு சுடுவதற்கு
காரணம் தேடினால்
நீதான் வந்து நிற்க்கிறாய்
கண்களால் முடியாத
ஒன்றை இமைகள்
மூடிவிட பார்க்கின்றன
உன்னை விட்டு
உறங்கிவிட துடிக்கின்றன
இரவிலும் வெளிச்சம்
தந்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்
பகலில் உன் முகம் போதும்
உறங்க விடு
இல்லை அருகே வந்துவிடு
நி(னை )லாவில் அமர்ந்துகொண்டு
அருகே வந்து வந்து மறையாதே
பூக்களை பகலில்
தேடுவது போல
இரவில் தேடுவது எளிதல்ல
உன் முகத்தைத்தான் சொல்லிகிறேன்
இதயத்தில் நீ
நடக்கும் சத்தம்
காது வரை கேட்கிறது
கால் கொலுசை கழட்டிவிட்டு நட
பஞ்சு மெத்தையோ
பாய் விரிப்போ
எனதருகில் ஓர் இடம்
உனக்காய் காத்துக்கிடக்கிறது
என் உறக்கத்தை பிடிங்கிக்கொண்டு
நிலவுக்கு பதில் சொல்லியே
வாய் வலிக்கிறது
இதில் நீ வேறு கதை
சொல்ல சொல்கிறாய்
தூரத்தில் நின்று
முல்லை மலர்ந்த
தோட்டத்தில்
நிலவொளியில்
நீயும் நானும் தனிமையில்
கனவு கலையும் முன்
என் கைகளை ஒருமுறை தொட்டுவிடு