மகுடி ஊதுதடி மாலைப் பொழுது

வித்தைகள் புரியுதடி
அந்த வானில்
ஒரு வானவில்
சித்து விளையாடுதடி
உன் சின்ன விழிகள்
என் நெஞ்சினில்
புத்தகம் விரிந்ததுபோல்
உன் புன்னகை இதழ்கள்
புதிய மந்திரம் ஓதுதடி
மயங்கும் மாலைப் பொழுதுகள்
என்னைச் சூழ்ந்து வந்து
மகுடி ஊதுதடி
வார்த்தெடுத்த தங்கச் சிலையே
வானிலிருந்து வந்த தேவதையே
பித்தாகிவிட்டதடி நெஞ்சு.
~~~கல்பனா பாரதி~~~
~~~கல்பனா பாரதி~~~