கனவில் பூ பறிக்கலாம்

கனவில் மீன் பிடிக்கலாம்
கனவில் பூ பறிக்கலாம்
கனவில் காற்று வாங்கலாம்
கனவில் தேரோட்டலாம்
கனவில் ஒருதலைக் காதலில்
காதலியுடன் கைகோர்த்து நடக்கலாம்
கனவுக்குள்ளும் தூங்கலாம்
அந்தத் தூக்கத்திலும் கனவு காணலாம்
அந்தக் கனவிலும்......
நிஜங்களுக்கு கால்கள் உண்டு
கனவுகளுக்கு பொய் சிறகுகளே உண்டு.

~~~கல்பனா பாரதி~~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (25-Jul-13, 9:13 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 211

மேலே