என் காதல் தேவதை

தொட்டாசினுங்கி இமை சில
பட்டாம்பூசிகளின் நிரந்தர வசிப்பிடம்....

முகில் மேகத்தில் குளித்த கருமை
அவளின் கூந்தல்....

வானவில்லின் துரிகையில்
வரையப்பட்ட துருவ கோடுகள்
அவளின் வளைந்த புருவம்...

இதழ் விரிக்காத தாமரையால்
தாரைவார்க்கப்பட்ட அவளின் காது மடல்....

மல்லிகை மலர்களை மலராமல்
தடுத்து தொடுத்த அவளின் மூக்கு....

மூங்கில் குழல்களை அவளின்
குரலுக்காக வெட்டியெடுத்து
ஒட்டி வைத்த அவளின் கழுத்து....

சிறு புன்னகை வெட்கத்தால் மறைத்த உதடும்
உதடால் மறைந்த பற்களும்
பற்களோடு மறைந்தத
சில பொக்கிஷமும் உயிரோடு
உலா வரும் அவள் பேசுகையில்....

காற்றோடு போகும் தென்றலும்
கை நீட்டி கைகோர்க்கும் அவளின் கைகளோடு.....

உடலோடு ஒன்றுமில்லை அதன்
அசைவோடு கலந்து மறையும்
பல கவிஞர்களின் கற்பனை....

மண் மட்டுமே அறியும் அவளின்
பாததின் பெருமை அதனால்தான்
அவள் செல்லும் வழியெங்கும்
தாங்கி ஏந்தி கொள்கிறது....

அவள் வளையலோடு கொலுசின் இசை
சில இசைக்கருவிகளை குப்பையாக்கும்
இசை கீற்று....

பெண்ணாக தெரியவில்லை
அவள் கண்ணீரெண்டை திறந்ததால்
மண்மீது நடக்கவில்லை நான் அவள்
என் காதல் தேவதையாக வந்ததாள்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (21-Dec-10, 1:18 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 421

மேலே