என் காதல்…

அன்று ஒரு நாள்
தனிமை என்னை
தின்னத் தொடங்கியது
வெறுமையை முதன்
முதலாய் ஏதிர்கொள்கிறேன்
என் சிறகுகள் சிதைக்கப்பட்டதாய்
உணர்கிறேன் நான்
தூக்கம் என்னை விட்டு
வெகு தூரத்தில்
ஏன் இப்படி,
கேள்விக்கு பதில் இல்லை
சில சமயம்
கேள்வியே இல்லை
சட்டென்று ஒரு நாள்
தனிமை தந்தது வரம்
அது அவளின் அறிமுகம், அவளால்
தனிமையும் ஒரு சுகம்
என்னை அவள்,
சிந்திக்க வைத்தாள்
சிரிக்க வைத்தாள்
ரசிக்க வைத்தாள்
வியக்க வைத்தாள்
நேசிக்க தொடங்கினேன் அவளை
என் காதல் பெண்ணோடு அல்ல
தாய் தந்த தமிழோடு..

எழுதியவர் : Vignesh (20-Dec-10, 11:25 pm)
சேர்த்தது : Sarathy
பார்வை : 381

மேலே