வரமாய் வந்த அன்னை

கருவறையில் நான் பூத்தபின்
அவள் வாழ்க்கை உதிர்ந்தால்
என் வாழ்கை மலர்வதற்கு

அவளின் கண்ணீர்
அவள் கண் அறிவதற்குமுன்
முந்தானை அறிந்துவிடும்

அவள் கவலை
அவளை தனிமைபடித்தினும்
மக்கள் உள்ளே இருப்பின்
பூத்துவிடும் பொய் புன்னகை
அவள் முகத்தில்

வெற்றியைத் தேடி ஓடுகிறேன்
கண் சுழன்றது
அவள் முகம் காண

சற்றே நிமிர்தேன்
கரம் முன்னே
புகழில் ஏற்றுவதற்கு

அவள் உழைப்புக்கும்
அவள் அன்புக்கும்
அவளுக்கு அவளே நிகர்
அவளே
என் அன்னை

எழுதியவர் : ம.மணி சுந்தர் (26-Jul-13, 9:32 am)
சேர்த்தது : manisundar
பார்வை : 60

மேலே