ஈ
அசுத்தம் உனது பிறப்பிடம்!
ஆனால்....
நான் பிறந்த போது என் தாய் விட முந்தி
முத்தமிட்டது நீ!
என் சகோதர, சகோதரிகள் வன் கொடுமைகளினால் இரத்தம் சிந்தி கிடந்த போது மௌனமாய் முதல் தகவல் அறிக்கை செய்தது நீ!
ஏழை பணக்காரன் பாகுபாடில்லை உன்னிடித்தில்
நீ நல்லவனா? கெட்டவனா? புரியவில்லை புரியாமல் மௌனமாய் நான்!