என் கிறுக்கி - 2

எதார்த்தமாக கிறுக்கி கிட்ட கேள்வியிலேயே கிறங்கி போய்விட்டான் கிறுக்கன்... மறுநாள் நட்புகளிடம் தன்னை ஒரு கதாநாயகன் போலவும் கிறுக்கியை கதாநாயகி போலவும் சித்தரித்து பல கதைகளை கட்டிவிட்டான்...

அன்று முதல் கிறுக்கியை நோக்கியே அவன் பார்வை... சுயநலவாதியாக இருந்த கிறுக்கன் பொதுநலவாதியானான்.. ஆமாம் தனது வேண்டுதலில் கிருக்கியை-யும் சேர்த்துக் கொண்டான் ...

ஒருமுறை பேசியதர்க்கே இந்த பாடு ... மறுநாளும் எப்படியாவது பேசிவிடவேண்டுமென்ற எண்ணத்தில் பலமுறை கண்ணாடி முன் ஒத்திகை எடுத்து விட்டு பக்கா ப்ரிப்பரேசனுடன் தான் வந்திருந்தான் கிறுக்கன்...

எப்படா 4.30 ஆகும் னு கைகடிகாரத்தைப் பார்த்தான். நொடிமுள்ளே மெதுவாக சுத்துவது போல் உணர்ந்தான்... அதாங்க காதல் வந்துடுச்சாம்... அட நம்ம கிறுக்கனுக்கு தான்.. இப்போதைக்கு கிறுக்கனுக்கு மட்டும் தான்....

ஒருவழியாக பள்ளி விட்டு வெளியே வந்து காத்திருந்தான் "லேடி பேர்ட்" சிட்டாக பறந்து வரும் தேவதைக்காக ... ஒ... கிறுக்கிக்காக... தினமும் "லேடி பேர்ட்" ஐ தனது தோழியுடன் உருட்டிக் கொண்டு செல்லும் கிறுக்கி அன்று அவளது தோழி வராததால் சிட்டாகவே பறந்தாள்...

சிறிது தூரத்தில்...

சிட்டாக பறந்த கிறுக்கி திடீரென "தரை இறங்கினாள்"...

கிறுக்கன் "வானில் பறந்தான்" ....



இன்னும் கிறுக்காக்குவாள் .....

எழுதியவர் : G.Udhay (26-Jul-13, 11:03 pm)
பார்வை : 92

மேலே