நண்பன்

இரத்த சொந்தம் இல்லாத
சுத்த சொந்தம்
செம்பு கலக்காத
சொக்க தங்கம் இவன்.

மண்ணுலகில் பிறக்காமல்
எனக்காக இறைவனால்
விண்ணுலகிலிருந்து
அனுப்பப்பட்டவன் இவன்.

என் நெஞ்சறையில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்தவன் இவன்.

ஒப்பனைகள் செய்து
கொள்ளாதவன்
முகத்திற்கும் சரி
அகத்திற்கும் சரி

இவன் என் நண்பன்.

சாதிகள் பார்த்து
பழகவில்லை நாங்கள்
சாதிப்பதற்காக பழகுகிறோம்

பாலை பருவத்தில்
உருவான நட்பு
எங்கள் பாடைகள்
போகும் போதும்
கூடவே வரும்...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

வைகைமணி

எழுதியவர் : வைகைமணி (27-Jul-13, 2:07 pm)
Tanglish : nanban
பார்வை : 61

மேலே