அழகான தோன்றல்
அழகான பெண்ணை
பார்த்தல் காதல்
செய்ய வேண்டும்
என்று தோன்றும் !
அழகான கண்ணை
பார்த்தால் இளமைனசை
கிறங்கடிக்க கூடும்
என்று தோன்றும் !
அழகான சிலையை
பார்த்தால் இருகை
எடுத்து கும்பிட வேண்டும்
என்று தோன்றும் !
அழகான கலையை
பார்த்தால் நின்று ரசிக்க
வேண்டும் என்று தோன்றும் !
அழகான மாஞ்சோலை
பார்த்தால் பறித்து
புசிக்க வேண்டும்
என்று தோன்றும் !
அழகான பூஞ்சோலை
ஒன்று பார்த்தால் அதன்
நறுமணம் நுகர வேண்டும்
என்று தோன்றும்
அழகான குழந்தை
பார்த்தால்
அள்ளி எடுத்து கன்னத்தை
கிள்ளி கொஞ்சி விளையாடலாம்
என்று தோன்றும் !
அழகான குமரி
பார்த்தால் இதயம்
சிவகாசி பட்டாசு வெடிப்பது போல
துடிப்பதாய் தோன்றும் .
****** தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்