காலம் கடந்து

பார்த்திருந்த நாள் முதலாய் -உன்
பார்வை வரம் வேண்டி
காத்திருந்த காலத்திலே
கை தவற விட்ட பின்பு
காலம் கடந்த பின்னர்
கண்டெடுத்து கரை சேர -உன்
இதயக் கோயிலின் பூஜைக்கு
காத்திருக்கும்- நான்
மூலவரா ? உற்சவரா?

எழுதியவர் : ஸ்ரீதர் (27-Jul-13, 3:26 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
Tanglish : kaalam kadanthu
பார்வை : 54

மேலே