என்றென்றும் நாம்..

உன் நினைவுகளின் நிழலில்
என் இதயம்..
உன் மூச்சுகாற்றை
தூவி செல்லும்
தென்றல்..
உன் சிரிப்பின் சாயலில்
நிலா..
உன் கை கோர்த்து
செல்லும்
நான்..
என்றும்
உன் அன்பின் சாரலில்..
இந்த இனிய பொழுதில்...
என்றென்றும் நாம்..