அவளுக்குக்காக இந்த திரி

வெற்றிக்காக என்
வாழ்க்கை விலாசம் இன்னும்
தொலையாமல் இருக்கிறது

வேதனைகள் என்னை
வெவ்வேறு உருவத்தில் வந்து
பலவாறு சோதிக்கிறது

வெற்றிடமாய் வாழ்ந்தபோது
விரட்டும் தோல்விகள்
மிரட்டவில்லை - ஆனால்
வெற்றிக்காக வாழும்போதுதான்
விலாசத்தின் பக்கங்கள்
அழுக்குப் படிகின்றன - ஆனால்
கிழிக்கப்படவில்லை - என்னுள்
சுமந்து வாழுகின்றேன் - நான் உயர
ஒரு விளக்கு அணையாமல்
ஒளிவிசிக்கொண்டிருகின்றன - அதுதான்
மனைவி எனும் அணையா விளக்கு
அவள் ஒளியில்
அழுக்குப்படிந்த பக்கங்களை
தூசுத் தட்டி மாசுத் துடைத்து
கிழியாமல் என் உயிரின் பக்கங்களை
அவளருகே துடைத்துக் கொண்டிருக்கின்றேன்

மனம் கலங்கி நிற்கின்ற வேளையில்
மானம் காக்கும் மேலாடையாய் - அவள்
மலர்ந்த முகத்தோடு என்னை
மகிழவைக்கின்றாள் - அவளுக்காக
வாழ்க்கையில் வெற்றி அடையவே - மரண
விலாசம் மாறாமல் நாட்களை
விரல் விட்டு கழித்து விலக்கி வாழ்கின்றேன்
வெற்றியே - தோல்விகளில் நான்
துவண்டுவிடவில்லை - என்னையும்
தோள்தாங்கி வாழவை - அவளை
வாழவைத்து - என் வாழ்வை
முடித்து விடு - அதுவரையில்
அவளோடு என்னையும் - என் குல
கொழுந்தையும் தொடர்ந்து வா
தொட்டுவிடும் போது உன்
தேவையினை நிறைவேற்றிவிடு
எத்தனையோ மறைமுகமான
எதிர்ப்புகள் எங்களை அரித்தெடுக்கின்றன
எதற்காக - எல்லாம் உன் இலக்குக்காக
உன் இலக்கு எனக்கு கிட்டியதும் - என்
உயிர் பிரிய வரம் தாராய் - அந்த
விளக்குக்காக இந்த திரி - உன்னிடம்
தினமும் தியானித்து வருகிறது

எழுதியவர் : சு.சங்கு சுப்ரமணியன் (28-Jul-13, 9:14 pm)
பார்வை : 52

மேலே