மனைவியின் இறப்பில் ...
உன் உடல் எரிந்து
சாம்பலானது ...
என் உடல்
அணையா விளக்காய்
கொழுந்து விட்டு எரிகின்றது ..
ஆயிரம் கண்ணாடிகள்
உடைந்தது போல்
வயிற்றில் கணமான வலி ...
கண்களில் நீர் வற்றியது இனி வரும்
காலம் சஹாரா பாலைவனம் ...
தாசியாய்
மனைவியாய்
மந்திரியாய்
தாயாய்
எனை தாலாட்டினாய்
இப்போது
தனியாய் தவிக்க விட்டு
நிரந்தரமாய் உறங்குகின்றாயே ?
உன் மதிப்பெண்களை கூட்டி
என் மதிப்பெண்களை பூஜயம் ஆக்கிவிட்டாயே?
என் அழு குரல் கேட்டு
எனை அனைக்க எழுந்து வருவாயா???