காதல் மடிந்திடுமோ !!!
விடிந்து வரும் சூரியன காண
மறைந்து வரும் நிலவு ஏங்குது...
தூரம் காணும் வானவில்ல தொட
பூமியில் உள்ள பூக்கள் ஏங்குது
குளத்தில் தெரியும் நிலவின் ஒளியை
உணர..
தண்ணீர்க்குள் உள்ள மீன்கள் ஏங்குது..
என்னை தெரிந்தும் தெரியாமல் இருக்கும்
உன்னோடு வாழ...
என் மனசும் தவியா தவிக்குது ...
சாத்தியமில்லாமல் போகும் சாகசங்களை போலே
என் காதலும் உயிரில்லாமல் மடிந்திடுமோ ??