என்னை போல
கருப்பு தாரகை ஒருத்தி
தென்றலெனும் இசைக்கேற்ப
உன் வதனமெனும் மேடையிலே
ஒற்றை காலில் ஆடுகிறாள்
நீயோ அவளை தடுத்து
ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறாய்
ஆனால் அவளோ
நீ தள்ளி தள்ளி வைத்தாலும்
என்னை போல
மீண்டும் மீண்டும் வருகிறாள்
உன்னை வருட !!!