வீழ்ந்திருந்தாலும் உனக்காக

எல்லாம் உனக்காக- என் கண்ணே
எல்லாம் உனக்காக
வாழ்வது இங்கே உனக்காக-நான்
வீழ்ந்திருந்தாலும் உனக்காக

அடைந்தது கோடி உனக்காக-நான்
இழந்தது பாதி உனக்காக
துறந்தது பாதி உனக்காக-இங்கு
தொலைந்தது யாவும் உனக்காக

கரைந்தது நெஞ்சம் உனக்காக-என்னில்
கலைந்தது கனவுகள் உனக்காக
கருத்தை இழந்தது உனக்காக-நான்
கவிஞன் ஆனது உனக்காக

நிலைத்திடும் ஆவி உனக்காக-இன்று
நிலை மாறிடும் நெஞ்சம் உனக்காக
நிறைந்தது நெஞ்சம் உனக்காக-நான்
நினைத்தது யாவும் உனக்காக

எழுதியவர் : ஸ்ரீதர் (29-Jul-13, 3:46 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
பார்வை : 96

மேலே