பின்னோக்கிச் செல்ல வரம் கொடு

முன்னுக்குவர வேண்டும் என்றே..
எல்லோரும் விரும்புவார்கள்..
எனக்கும் அப்படித்தான் ஆசை
ஆகவேதான்
பின்னோக்கிச்செல்ல விரும்புகிறேன்..
கடந்து போன காலங்களை..
கைப்பற்ற !
போனதெல்லாம் போகட்டும்
வயது மட்டும்
வந்தால் போதும்..
வரம் கொடு இறைவா..!