வெளிச்சம்

மின் விளக்கேற்றி
தன் இருள் போக்க எண்ணும்
மானுடா...
இருள் எது-என
உணர்ந்தே
உன் ஒளி தேடு ...

தனக்கென்று தனக்கென்று
எல்லாம் தேடி
தனக்கேதும் கிட்டாது-என்று
தெரிந்தும்...

தன்நலத்தோடு வாழும்
தரங்கெட்ட மனிதா..

இருள் எது-என
உணர்ந்தே
உன் ஒளி தேடு ...

வெளிச்சம் என்பது
வெறும் விளக்கேற்றி
பெறுவதில்லை...

மனத்தின்
இருள் அகற்றி
இறையின் ஒளியில்
வெளிச்சம் காண்!

எழுதியவர் : பாரதிமோகன் (21-Dec-10, 5:46 pm)
சேர்த்தது : bharathimohan
Tanglish : velicham
பார்வை : 485

மேலே