வெறும் குப்பைகளல்ல
மாநகராட்சியின்
வாகனங்களில்
குப்பையென அள்ளப்படும்
நடைபாதை கடைகளின்
வாழ்க்கை ....
...........................................................................
குப்பைமேடுகளில்
குடியிருக்கும் ஆன்மாக்கள்தான்
சுத்தம் செய்கின்றன
நகரத்தின் சாலைகளை .....
............................................................................
மக்காத குப்பைகளை போலவே
மாற்றமில்லாமலேயே
குடிசைகளின் சரித்திரமும் ...
................................................................
பன்னாட்டு நிறுவன
பணியாளர்களின்
காலணிகளால்
சுத்தம் செய்ய படுகிறது
வறுமைக்கறை படிந்த
பட்டினி வாழ்க்கை,,,,,,
........................................................................
அவ்வப்போது
பத்தி எரியும்
குடிசைகளுடன்
சாம்பலாக சிதறிக்கிடக்கின்றன
ஜனநாயகத்தின் அஸ்திகளும்