....சுனாமி கூட பேசினால்?

கடல் தாயே....நீ ஏன் கடல் பேயாய் மாறினாய்?

உன் கொடூர பசியால் நந்தவனமாய் இருந்த கடலோர பகுதிகள் நரகமாய் மாறின....

உன்னை அன்போடு அரவணைக்கும் தாயாக தானே கருதினோம்....

ஆனால் அனைவரையும் அழிக்கும் பேயாக ஏன் மாறினாய்?

சுமித்திரா தீவை சுடுகாடாய் மாற்றினாய்..

இலங்கை எனும் இன்ப கடல் தீவை அடியோடு அழித்து சென்றாய்...

தமிழ்நாட்டை தரைமட்டம் செய்தாய்...

தாயே!
உன்னால் நாட்டில் நஷ்டம்

மக்கள் மனதில் கஷ்டம்

நீ இனியும் வர வேண்டாம் என்பது
எங்களுடைய இஷ்டம்

எழுதியவர் : கார்த்திக் (22-Dec-10, 8:20 am)
சேர்த்தது : arjunkarthik007
பார்வை : 381

மேலே