பெண்ணின் அழகு
தண்ணீர் குடம் ஏந்தி,
சிங்கார நடை நடந்து,
மான் விழியாள்,
மருண்ட பார்வையுடன்,
சிவந்த மேனியாள்,
சீர்மிகு குணத்தாள்,
கார்மேக கூந்தலாள்,
வான வர்ண சேலையில்,
சலசல நீரோடையில்
நீர் அள்ளிப் போய் வர,
சிந்தையிலே இருக்கும்
கண்ணாளன், உள்ளம்
கவர் கள்வன் வரக்
காத்திருக்கிறாள்.