ஆயுள் முடியட்டும்

மண்ணுக்குள் போகும் வரை
மனதுக்குள் உன் நினைவு இருக்கும்

தோழி (தோழன்) நீ உயிராய் இருக்கும் வரை
என் இரத்த ஓட்டம் எப்படி நிக்கும்

காலம் பல கடந்தாலும்
காணாமல் போகாது ஆகாயம்.

காலன் வந்து பிரிக்கும் வரை காத்திருப்பேன்
நட்பின் நினைவுகளோடு நான் இருபேன்.

கடவுள் வந்து வரம்கொடுத்தால்
உன்னையும்,என்னையும் பிரிக்காமல்
என் ஆயுள் முடிய கேட்பேன்.

அனைவர்க்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

எழுதியவர் : அரவிந்த் (4-Aug-13, 5:47 am)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 224

மேலே