பூமிப்பந்தில் வட்டமடிப்போம்....

முயலொன்று எலியொன்று
நாயொன்று பூனையொன்று
நட்பாக இருப்பதென்று
முடிவெடுத்து
சண்டைகள் இல்லாமல்
சர்ச்சைகள் இல்லாமல்
சந்தேகம் கொள்ளாமல்
சந்தோசம் மட்டும் கொண்டு
வாழ்க்கையை ரசித்து வாழ்கின்றன
இனம் வேறு என்றபோதிலும்...
ஐந்தறிவு ஜீவன்கள்
ஐக்கியமாய் வாழும் பொது..,
ஆறறிவு மனிதன்
ஜாதி மதம் என்று
பகுத்தறிவின்றி தன்னினதோடே
பகைக்கொண்டு வாழ்கிறான்...
இன்று முதல் பகை மறந்து
இனியதோர் நட்பிலே வானுயர்ந்து
நண்பர்களாக சேர்ந்து
நாமும்
பூமிப்பந்தில் வட்டமடிப்போம்....

....இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

!!!...விநோத் கண்ணா...!!!

எழுதியவர் : !!!...விநோத் கண்ணா...!!! (4-Aug-13, 1:51 pm)
சேர்த்தது : விநோத் கண்ணா
பார்வை : 458

மேலே