பெண்ணே உனக்கு என்னை
கடற்கரை மணலில்
காலுன்றி நடந்த
உன் பாதங்கள் எனக்கு பிடித்தது ...
நிசப்தமான
அதிகாலை பொழுதில்
தரையில் வரையப்பட்ட கோலங்களால்
உன் விரல்கள் எனக்கு பிடித்தது...
பார்த்தவுடன் மயங்க செய்யும்
உன் கண்கள் எனக்கு பிடித்தது...
காற்று வீசும் நேரத்தில் கலைந்தோடும்
உன் கூந்தல் எனக்கு பிடித்தது...
கவிதையாய் நீ பேசும்
உன் மொழிகள் எனக்கு பிடித்தது...
ஆனால், ஏனோ பெண்ணே உனக்கு மட்டும் என்னை......??????