@@@ அய்யோ பாவம் @@@
@@@ அய்யோ பாவம் @@@
நீருக்குத் தாகம் இல்லாத நாவுண்டோ
சோறுக்குப் பசியும் எடுக்காத வயிறுண்டோ
வேருக்கு நீரூட்ட விளைந்திடும் பலனை
வேறொருவர் வந்திங்குப் பறிப்பது சரியோ
ஊருக்கு உழைத்த உன்னதம் மாறிப்போய்
உணவுக் குழைப்பதே உசிதமெனும் நிலையில்
யாருக்கும் உதவாமல் எதுவுமே செய்யாமல்
பாருக்குப் பாரமாய் பணக்காரர் இருக்கிறார்.
பல்லாயிரங் கோடிபணங் காசு இருந்தாலும்
எல்லா வசதியுடன் திக்கெட்டும் பறந்தும்
நில்லா நவீன அரைகுறை ஆடைதனில்
பொல்லாரின் மனைவியர் சுற்றி அலைவார்.
நல்லார் பெற்ற நவமணிப் பிள்ளைகள்
புல்லராய் பாரில் புரியாமல் வலம் வந்து
கல்லாத வித்தையெல்லாம் காசிறைத்துக் கற்று
அல்லும் பகலும் போதைக்கு அடிமையானார்.
கல்லால் ஆகிய கயவர்களின் இதயமது
சொல்லால் மாறுமோ சொர்ணமாய் தேறுமோ
பல்லிலே பாசாணம் கொண்ட பாம்பதாய்
தொல்லையே தந்திடுவார் தனியே நின்றாலும்.