நேசம் இருக்குதென்பாய்...
நேசம் இருக்குதென்பாய்
நேரம் மட்டும் இல்லை என்பாய் ...
வாசங்களை நீ எனக்கு
வசமாக்கி தந்ததில்லை
வனப்புகளை விருப்பத்தினால்
வரமாக்கி தந்ததில்லை
சுவாசத்திலே உன் வாசம்
சேர்ந்து வர யாசித்தேன்
வாய் மொழி சொல்வதற்கே
வஞ்சி நீ யோசித்தாய்
கேட்க்கும் ஓசையெல்லாம் உன்
குரலாக பாவித்தேன்
கேட்டும் கேளாமல் நீ
போக நான் தவித்தேன்
வசந்தங்களை நீ எனக்கு
வாரி வழங்கவில்லை
வாலிபத்தின் பக்கங்களை
வாசிக்க விட்டதில்லை
சுகம் ஏதும் நீ எனக்கு
சுயமாய் கொடுத்ததில்லை
சொர்கமத்தில் எனக்கு இடம்
சொந்தமாய் இருந்ததில்லை
இனிமைகளை நீஎனக்கு
இயல்பாக தந்ததில்லை
இனிய நினைவுகள் என்னுள்
இருக்க நீ விட்டதில்லை