சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்...
சொல்லில் உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லாம்
அச்சொல் கொச்சையின் பிச்சையால்
தமிங்கல சொல்லாகி , உயர்ச்சொல்
பிறர்மொழி யாசித்து பேசும்
வேற்றுச்சொல்லாயிற்று...
ஆங்கில மோகத்தில் இச்சைத்
தமிழாய் வாழ எம்மொழியென்ன
செப்பு மொழியோ ...
அறம் தங்கி
மானம் தாங்கிய செம்மொழி !
அம்மொழி பன்மொழி கலவையால்
தமிழன் வாய்மொழி அறிவற்ற
அறியாமை மொழியாயிற்று...
தமிழ்ச்சொல்லிலே 'ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ'
இணைந்திட எம்மொழி சடங்கு
மொழியாயிற்று...
பாமரனும் தமிங்கல கோர்வையில்
தாய்மொழியை மறதியில் மாய்த்து
பேய்மொழியை எம்மவர் சொல்லில்
பாய்த்து சீரற்ற தமிழரானாய்...
புலவனும்,அறிஞனும்,வள்ளுவனும்
தீட்டிய இச்சொல் மதியற்றோர்
சேர்க்கையில் தன்மைச்சொல்
பிழையாவதோ!
தமிழனாய் யோசி
கலங்காத தமிழால் பேசி
தாய்மொழி காக்க
உயர்ச்சொல் தமிழ்ச்சொல்லை வாசி...