ENGE SENDRAI

எங்கே சென்றாய்

ஏன் சென்றாய்
என்னை விட்டு . . .

தென்றலாய் வீசினாய்
தேனாய் பேசினாய்
பூக்களாய் சிரித்தாய்
புதுவழி காட்டினாய்
பாலை வாழ்வை
பசுமை ஆக்கினாய்
புழுதியில் இருந்தவனை
பூந்தோட்டத்தில் அமர்த்தினாய்
என்னை ஏங்க விட்டு
எங்கு சென்றாய் இன்று. . . . .

என் விழி எல்லாம்
உன் திசை நோக்கி
கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
எத்திசையிலும்
காணவில்லையே நீ . . . .

என் பாதை எல்லாம்
நீ இருக்கும் நிலம் தேடி
குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் பாலை ஐந்திலும்
அகப்படவில்லையே நீ. . . .

கடல் கடந்து நீ
சென்றாலும்
என் கண்மணியில்
உன் பிம்பங்கள் தான்
எப்போதும் . . . .

நீண்ட தூரம்
நீ சென்றாலும்
நினைவெல்லாம்
என் நெஞ்சமெல்லாம்
உன் நினைவு தான்
எப்போதும் நிழலாய் . ..

நிஜமாய் நீ வருவாய்
நின்றிருப்பேன்
நான் தனியாய். . . .

எழுதியவர் : Prabha (23-Dec-10, 4:46 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 382

மேலே