எனக்கான பரிசு

பிரிவு துவங்கிய நாட்களில் துவங்கியது மாற்றம்...
ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்கும் போது, எத்தனை சந்தோஷங்களை கண் முன்பு வைத்துக் கொண்டு தொலைத்திருக்கிறேன் என்பதில் பிரதிபலித்தது... என் முட்டாள்தனம்!
எண்ணங்கள் புரட்டி போட, கண்ணீரோடு காகித பக்கங்களை புரட்டி எழுத துவங்கினேன் ... சந்தித்தவைகளையும் அதில் தொலைத்தவைகளையும்!
எதை கொண்டும் நிரப்ப முடியாது என நினைத்த வெற்றிடங்களை கண்ணீர் துணைக் கொண்டு இன்று நிரப்பி விட்டேன்!
என்றோ ஒருநாள் நினைத்துப்பார்க்கவும், நினைவூட்டவும் எனக்கான அழகான பரிசு கிடைத்து விட்டது!!