பாவம் படைப்புகளின் பிரசவம் (யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)

"பொதி சுமக்கும்
கழுதைகளாய்
புத்தகம் சுமக்கிறது
நூலக அலமாரிகள்"
... . . . . . . . . . .
நன்றிதோழா குமார்
. . . . . . . . . . .


இங்கே
ஏ.சி.ஷோரூம்களில்
செருப்புகள் விற்பனைக்கு.....!!!
மூத்திரத் தெருவில்
படைப்பாளிகளின்
புத்தகங்கள்
விற்பனைக்கு.....!!!
அதில்
பாரதி யென்ன?
வள்ளுவன் யென்ன?
படைப்புகளின் பிரசவம்
படைப்பாளிகளின்
பிரசவம்-இரண்டுமே
தெருவின்
கழிப்பறையோராமா
முடிவது?
அய்யோ!
விற்பனைக்காகவா படைப்பை
எழுதினீர்?
எங்கள் தெருக்களில்
ஈ யின் வருகையால் தான்
வாடகை தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது!
இன்னும் எத்தணை
நாளைக்கு அங்கே
வயிற்றுப் பிழைப்பு
நடக்குமோ?
ஓ படைப்புகளே!!!
பொறுத் தருளுங்கள்....
அந்த ஏழை,
பொதியாய்
உன்னை
சுமக்கிறான்!!!
அவன் வீடும்
கல்வி பெறட்டும்.....!!!
பொறுத்தருளுங்கள்....
நன்றி நண்பர்
வேலூர் இராஜா

எழுதியவர் : ருத்ரா (6-Aug-13, 8:03 pm)
பார்வை : 68

மேலே