சின்ன சிரிப்பு கதை

அந்த நாட்டு ராஜா போருக்குப் போக வேண்டியிருந்தது. அவரிடம் ஏகப்பட்ட செல்வம் இருந்தது. இது போக அழகான மனைவி வேறு இருந்தாள். அப்படியே போட்டுவிட்டுப் போக அவருக்கு மனதில்லை.

எல்லா செல்வத்தையும் ஒரு சிறிய கோட்டைக்குள் போட்டு அந்த கோட்டைக்குள்ளே தன் மனைவியையும் வைத்துப் பூட்டினார். ஆனால் சாவியைத் தன்னோடு எடுத்துப் போக முடியாது. யாரிடம் கொடுத்தாலும் தான் சென்றவுடன் கோட்டையைத் திறந்து மனைவியை அனுபவிப்பதோடு செல்வத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.

அவரிடம் ஒரு நம்பகமான தளபதி இருந்தான். அவனிடம் சாவியைக் கொடுத்து போரிலிருந்து தான் திரும்பும்வரை சாவியை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மைல் தூரத்தைக் கூட கடந்திருக்க மாட்டார் ராஜா. பின்னால் தளபதி ஓடி வந்துகொண்டிருந்தான்.

மூச்சு வாங்க ராஜாவிடம் சொன்னான் தளபதி : ''நீங்க தப்பான சாவியைக் கொடுத்துட்டுப் போறீங்க. இதை வச்சு அந்தக் கோட்டையைத் திறக்க முடியவில்லை.''

நன்றி ;தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (7-Aug-13, 8:07 pm)
பார்வை : 411

மேலே