அழகு என்பது.....

கொட்டுகின்ற மலையதனை பார்த்தல் அழகு
குழந்தைகளின் சிரிப்பொலியை கேட்டல் அழகு
வட்டஒளி நிலவுதன்னை ரசித்தல் அழகு
வானவில்லின் ஏழுவகை நிறங்கள் அழகு
கட்டழகு காதலியின் புன்னகை அழகு
கனிஇதழின் உதட்டோர மச்சம் அழகு
மொட்டவிழ்ந்து மலராகும் தருணம் அழகு
முகிலேகும் மலைச்சிகரம் பார்த்தல் அழகு!!

கட்டவிழ்ந்த் காட்டாற்று வெள்ளம் அழகு
கரையைத் தொட முயலுகின்ற அலைகள் அழகு
வெட்டவெளி வானந்தன்னை காணல் அழகு
விளைந்தநெல் தலைசாயும் அழகே அழகு
நட்டநடு இரவுதன்னின் இருளும் அழகு
நண்பகலின் சூரியனின் வெப்பம் அழகு
மெட்டுடனே ஒன்றாகும் பாடல் அழகு
மின்மினிப் பூசிகளின் மென்மை அழகு!!

தொட்டபொருள் பனியாகும் குளிரும் அழகு
தொன்மைமிகு திருக்குறளின் வளமை அழகு
நெட்டைநெடு மரங்களுள்ள வனங்கள் அழகு
நெளிந்தோடும் ஆற்றுமணல் படுகை அழகு
வீட்டுச்சுவர் மேலுலவும் பல்லி அழகு
விடியற்காலை இருள்சேர்ந்த வெளிச்சம் அழகு
காட்டியவை அத்தனையும் காட்சிப் படுத்தி
கவிதையொன்று உருவானால் அதுவே அழகு!!

வெ. நாதமணி,
07/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (7-Aug-13, 9:03 pm)
பார்வை : 102

மேலே