நினைவலைகளில் நெஞ்சம்
உன் விரல் பிடித்துச் செல்லாத
என் பயணத்தில்
நான்கு வழிச்சாலைக்கூட
ஒற்றையடி பாதையாய்.....
பக்கத்தில் இல்லாத
என் தூக்கத்தில்..
பஞ்சுமெத்தை ம் கூட
பாராங்கல்லாய்....
நெஞ்சத்தில் இருந்தும்...
வெற்று காகிதங்களாய்
க(கி)ழிந்து போகும்
உயிரற்ற என் நாட்களை
மீட்டெடுக்க முயற்ச்சிக்கிறேன்
நம் பழைய
நிகழ்வுகளின் நினைவலைகளால்...