penne
பெண்ணே
உன் அழகை கண்டு மயங்கினேனா
இல்லை
உன் விழியைக் கண்டு வியந்தேனா
உன்னுடைய மனதைக் கண்டேன்
அதனுள் என் இதயம் வாழக் கண்டேன்
இதன் பெயர்தான்
காதலோ?
என் மனதைக் கேட்டேன்
அதற்கு பதில் தெரியவில்லை.
நீருக்குள் மீன்கள் வாழும்
உன்னருகில் நான் இருந்தால்
எனதின்பம் இவ்வுலகை ஆழும்
என்னைப் பற்றிய துன்பமோ மீளும்
செல்வங்கள் பெருகும் மேன்மேலும்
எனது தென்றலாக நீ
இருக்க வேண்டும் எந்நாளும்.
மல்லிகை பூச்செண்டாக இரு
என்னை மணந்து கொண்டு
என்றும் மணமாக
விடியும் பகலாக இரு
என்னை மணந்து கொண்டு
என்றும் வெளிச்சமாக
பாத்திரத்திலிரிந்து
வடியும் வெண்ணிற ஆடையாக இரு
என்றும் வெள்ளையாக
என் மனதைப் போல
பத்து மாதம் சுமந்து
பெத்து எடுத்த அன்னையின் மீது ஆணை
நான் செத்து மடிவேன் உனக்காக.