அம்மா

காலையில் எழுந்தவுடன் கண்ணுக்குள்ளே அவள் முகம் - அன்று எனக்கு காபி கொடுத்து கரை பல் தேய்க்கவைத்து பழமும் உணவும் ஊட்டி பள்ளிக்கு அனுப்பியவள் காய்ச்சல் தலைவலி என்றால் கசாயம் கொடுத்து காப்பாற்றியவள் கால் கடுக்க ரேசன் வாங்கி கந்தல் துணி தினம் உடுத்தி கல்லூரிக்கு என்னை அனுப்பியவள் கால் வயிறு உணவு உண்டு காலமெல்லாம் உழைத்தவள் அப்பா இல்லாத குறையை -அவளின் ஆழ்ந்த அன்பால் போக்கியவள் கடைசி காலத்தில் சுருக்கு பையில் வைத்திருந்தாள் எனக்கு கல்வி கட்டணதிருக்கான பணம் !