அவர்கள் அப்படித்தான்
பாசக்கார வேஷம் போடும்
மோசக்கார உலகம் இது
துன்பம் வரும் வேளையிலே
உன்னை துன்புறுத்தும் உலகம் இது ........
முகத்தினிலே மகிழ்விருக்கும்
அகத்தினிலே வெறுப்பிருக்கும்
நாசுக்காக நயம் பேசி
அவர் நலனில் மட்டும் குறியாய் இருப்பார் ......
நிலைமாறும் உலகில்
மனம் மாறும் மனிதன்
நிரந்தரமில்லாத உறவுகளால்
தடுமாறும் மனிதன் .........
நல்லவர்களை பழிபோடும்
தீயவர்களுக்கு புகழ்பாடும்
ஆதாயம் தேடும் அற்பஉலகம்
சுயநலம் பார்க்கும் சொற்ப உலகம் .........
பழகி வந்த மனிதர்களில்
பலபேர்கள் இப்படித்தான்
சுயநலம் கொண்டவர்களாய்
சூழ்ச்சி செய்யும் மனிதர்களாய் ...........
பிறர்பொருள் நாடிடும்
சதிகார மனிதர்கள்
சதிச்செயல் செய்திடவும்
சளைத்ததில்லை ஓர்நாளும் .........
சுவை அறியும் நாக்கு அது
சபையறிந்து மாறிப்பேசும்
சுயநலமாய் சாட்சி சொல்லி
சோதனைக்கு உன்னை ஆழ்த்தும் .........
இருக்கும் வரை பிடுங்கிக்கொண்டு
இழந்தபின்பு ஓட்டம் காணும்
தனது நலம் வேண்டி வேண்டி
உன்னை தரித்திரமாய் ஆக்கி போகும் ........
காசிருந்தால் கடவுலென்பார்
கடனிருந்தால் தரித்திரமென்பார்
சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்
சொந்தங்களே அதிகம் உண்டு ..........
நல்ல மனம் உலகில் இல்லை
நன்றி குணம் எவர்க்கும் இல்லை
வேதனை பட வேண்டியதில்லை
"அவர்கள் எல்லாம் அப்படித்தான் "!