என் பிரிய மரமே ......!!

நித்தம் நித்திரை கலைந்ததும்
என் காட்சியில் - நீ ...!
புத்தம் புதிதாய் புத்துணர்வு
தருபவள் நீ ....!
முத்தம் கொடுப்பது போல் கிளைநீட்டி
முகமருகில் வருவாயே ....!
சத்தம் இல்லாமல் எதிர் வீடு
கிரயமானதால் -உனை
சுத்தமாய் வெட்டி சாய்க்க - புது
வீட்டின் திருப்பலி ஆவாயோ ....?
சித்தம் கலங்கிப் போவேன் - என்
பிரிய மரமே ...நீயின்றி ... !
பித்தம் பிடித்து விடும் - எனைப்
பிரிந்து நீ சரிந்தால்..... !
விபரீதம் நீ அறியாய் !
விடை கொடுக்க மனமுமில்லை !
விதி முடிந்து போயிற்றோ ?
விம்முகிறேன் ....... என் தருவே .... !!!