"எதை வர்ணிப்பது"
அதிகாலை குளியல் முடித்து,
சாம்பிராணி புகை மூட்டத்தில்-பெண்கள்
கூந்தல் பின்னும் அழகை
காணமுடிவதில்லை இன்று.
மாலை நேர இளஞ்சூரியனை நோக்கி
வயல்களின் நடுவே நீளும் சாலை போல்
ஒற்றை ரோஜாவை நோக்கி நீளும்
நடு வகிடு கிடைப்பதில்லை இன்று.
எலுமிச்சை இடையை சிறிது காட்டி,
ஏங்க வைக்கும் இடத்தில் முடியும்
ஜடையை ஆட்டி - இருக்கும் அழகை
இரட்டிப்பாக்கும் தாவணிப்பெண்கள் இன்றில்லை.
ரெட்டை ஜடை loose hair ஆக மாறியது,
நடு வகிடு எல்லாம் மலையேறிவிட்டது,
பாவாடை தாவணி எல்லாம் பாவம்
காணவில்லை அறிவிப்பில் கூட காணவில்லை.
இதனால்தான் குழம்பிக்கிடக்கிறார்கள் ஆண்கள்
இனி எதை எப்படி வர்ணிப்பெதென்று,
என்று புரியும் இந்த பெண்களுக்கு,
இது எங்கள் தவறில்லையென்று.