என்னைக் கொலையிடும் அரசுக்கு
ரத்த நிறத்திலொரு நிழல்
வன்மம் பீறிட்டு வழிய
நூற்றாண்டுகளுக்கு மேலாக படர்கிறது
இது பற்றி எழுதுவதாலோ
அல்லது பேசுவதாலோ
தசைகளை துளையிட துப்பாக்கிகள் தயார்
ஆதலால்
கொழும்பு சட்ட ரீதியாக
வெளிப்படையாக
ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்து
உலகைத் துணைக்கு அழைத்து
எனது இனத்தின் பெயரை கீழ்மையான
சொற்களால் திட்டி
வேகமாகவும் அதைவிட வன்மமாகவும்
என்னை கொன்று விட முடியும் தான்
ஆனாலும்
சிறுமைப்படும் மானுடத்தின்
கையாலாகாத வெளியொன்றில்
பற்றிப் படரும்
எனது குருதிக் கறைகளும்
கவிதைகளும்
ஒரு சுதந்திர சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும்
அடுத்த தலைமுறையை