தமிழின் எதிர்காலம்!
ஞாபகம் இருக்கிறதா தமிழா
நம் தாய்மொழி தமிழென்று
கண்ணில் புலப்படுகிறதா தமிழா!
கன்னித் தமிழ்மொழி அழிவதின்று
உன்னத பொதுமறையை நம்
உலகிற்கு தந்ததும் தமிழ்தான்!
உயர்வின்றி இன்று உலகில்
தாழ்ந்து கிடப்பதும் தமிழ்மொழிதான்!
நான் இதுவரை அறியேன்
பாற்கடல் அமுதின் சுவையை !
அதனினும் இனியசுவை கண்டேன்
என்இனிய தமிழின் மூலம்!
மும்முடி வேந்தன் ஆண்டமொழி!
முத்தமிழ் சங்கம் கண்டமொழி!
உலக அளவில்இது செம்மொழி!
உன்னதத்தமிழ் என்றும் நம்மொழி!
அந்நிய மொழிகள் பலவற்றில்
மோகம் கொண்டுகிடக்கும் தமிழனே!
கொஞ்சம் யோசித்துப்பார் ! நாளை
நம்தமிழின் எதிர்காலம் என்னவென்று!