நிமிடங்களை எண்ணுகிறேன்

இமையோடு இமை நோக்கி
இதயங்களை இணைத்து விட்டு
இல்லையென்று இருள் தந்து விட்டாயே!
உள்ளத்தை உணர்ந்தவன் நானென்று
உதடுகள் உரைத்தது நினைவில்லையோ?

நட்பென்ற போர்வையில் - என்னை
நடை பிணமாய் நடக்கவிட்டு
நிம்மதி அடைவது நியாயம்தானா?
கனம் கனம் கரைத்த
கைபேசி கரைக்கும் - நீ
பாடிய காதல் பாட்டு.

கண்ணே கனவுகளை கலைக்காதே
காதல் இன்றி சாதல் தராதே!
நிமிடங்களை எண்ணுகிறேன் - நீ
என்னோடு சேரும் நேரம் எப்போது!!
- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (13-Aug-13, 10:57 am)
பார்வை : 65

மேலே