பெருமை
என்னை பெற்றெடுத்த என் தாயை
பார்த்து பெருமைபடுகிறேன் ;
என்னை தூக்கி வளர்த்த என் தந்தையை
பார்த்து பெருமைபடுகிறேன் ;
எனக்கு அறிவு ஊட்டிய என் ஆசிரியரை
பார்த்து பெருமைபடுகிறேன் ;
என் இன்ப துன்பங்களில் பகிர்ந்து கொண்ட
என் நண்பர்களை பார்த்து
பெருமைபடுகிறேன்;
என்னை நேசிக்கும் என் துணைவியை
பார்த்து பெருமைபடுகிறேன் ;
இதை விட ,
நான் நேசிக்கும் ;
நம் "இந்திய தேசத்தில்" பிறந்தது தான்
நான் ! பெருமையோ
பெருமைபடுகிறேன் !.........