மிஞ்சி நிக்குது ...!!!

காசு பணம் கை நெறையா கொட்டி கெடக்குது...
காதலிச்ச பொண்ணு முகம் கண்முன்னே சொக்கிநிக்குது...
சொந்தக்கார பாசமெல்லாம் என்னத்தான் சுத்தி நிக்குது...
எல்லாம் இருந்தும் ஏனோ நெஞ்சுக்குள்ள ஒரு சோகம்
தொத்தி நிக்குது ...
அத நெனச்சு நெனச்சு கண்ணு மூடி பார்த்தா...
நண்பா உன்முகம்தான் கண்முன்னே வந்து நிக்குது...
தூரத்துல நீ இருந்தும் ...நீ பேசின பேச்செல்லாம்
இன்னும் என் நெஞ்சுக்குள்ள பொதஞ்சு கெடக்குது...
உன்ன நெனச்சுப்பாக்கும் போதெல்லாம்...கடைசியில
துளி கண்ணீரும் ஒரு சிரிப்பும்தான் மனசுக்குள்ள
மிஞ்சி நிக்குது ...!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Aug-13, 3:37 pm)
சேர்த்தது : சதீஷ் தமிழன்
பார்வை : 116

மேலே