எல்லோரும் யோசியுங்கள்
அன்னையின் துன்பத்தில் ஆளான மனிதா
அவளையும் துன்பத்திற்கு ஆளாக்கிய மனிதா
பாலூட்டி வளர்த்த நன்றியை மறந்து
படுபாதகம் செய்தாயே அனாதையாய் விட்டு ...........
தோள்தூக்கி வளர்த்த தந்தையின் பாடு
நீ தோள்உயர அவன் நிலை ஏளனம் ஆனதோ
திருவடி பற்றவேண்டிய அவனது பாதம்
இன்று தெருவடிக்கு போனதோ ஐயோ கொடுமை .......
ஒருவேளை உணவேனும் ஊட்டியவரை நினை
உன் உணர்வுக்குள் போற்றியே காலத்திற்கும் பணி
எவர் பொருளையும் திருடாமல் நேர்மையாய் வாழு
உனக்குள்ள நியாயத்தை நீதியோடு கேளு ....
சதைபற்றி வளர்ந்துவரும் பூத உடம்பு
நீ சாகையில் விட்டு போவாயே தனியே கிடக்க
பொருள்பற்றி புகழ்பற்றி பயித்தியமாய் இருந்தாய்
நீ போவையிலே எதைபற்றி போவாயோ மனிதா .......
நீதியாய் வாழ்ந்திருந்தால் நிற்ப்பவர் பலபேர்
அநீதியாய் வாழ்ந்திடவே பழித்திடுவார் பலபேர்
வரலாறு போற்றுகின்ற மனிதனாய் வாழு
உன்னை வரவேற்க காத்திருக்கும் பலபேரை தேடு ......
காசேதான் கடவுளென்று கண்மூடி அலையாதே
ஆசையென்னும் பேய்பிடித்து அழிந்து மடியாதே
மனமொரு கோவிலாய் மனிதனை மனிதனாய்
நினைத்துநீ காலம்கடத்து அவர் நினைவிலே ஆழபதிந்து
கௌரவத்தை பார்த்து கலவரம் செய்யாதே
பூ பொழியும் பூமியிலே குருதியை பிழியாதே
நீயும்நானும் செத்தாலும் நாத்தமெடுக்கும் உடம்பு
எவறுடம்பிலும் ஓடுவது ஒர்ரத்தம் சிகப்பு ............
பலபேர் சொல்லிப்போன அறிவுரையை கேளு
பக்குவமாய் யோசித்து வாழ்க்கையில் தேறு
நான் திருந்தி நீ திருந்த நாடே திருந்தும்
நலம்பலவும் பெருகியே நாடே செழிக்கும் ........