சப்தமில்லாத கவிதை

முத்தம் போற்றும் ராஜன் கானின்
"உதடுகள் எழுதிய கவிதை" தந்த சப்தமில்லா
கவிதை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முத்தம்
சந்தமில்லா புதுக் கவிதை போல்
சப்தமில்லாத இதழ் கவிதை
சொந்தம் கொண்டவர்களே
புரட்டிப் பார்த்து ரசிக்கும்
தனியுடைமை புத்தகம் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதழ் கிண்ணத்தில்
சுவைத் தேன் ஏந்தி நின்றாள்
இதழை இதழால் தொடவோ
அல்லது
இலக்கியத்தால் தொடவோ
என்று கேட்டேன்
அவள் மௌனமானாள்
மௌனத்தின் பொருள்
என்னவோ ? புரியவில்லை
~~~கல்பனா பாரதி~~~