அழகு

அவள் பேர் அழகு
அவளோ பேரழகு 
அழகிற்கு  தனி இலக்கணம் இல்லை
 அழகிற்கு இனி  இலக்கணம் ஆனாள்
 அவள் அழகிற்கு தொடக்கப்புள்ளி
 அழகின் தேடலுக்கு முற்றுப்புள்ளி 
ஒப்பனைகளற்ற அவள் முகம் பார்த்தால் 
தீட்டப்படாத ஒரு  ஓவியம் 
ஒப்பனைகளுடன் அவள் முகம் பார்த்தால் 
தீட்டப்படலாம் பல காவியம்
தளை தட்டாத அழகிய வெண்பா
நான் சொல்லும் இந்த பெண்பா...

எழுதியவர் : தேவதைவாதி (14-Aug-13, 7:43 am)
பார்வை : 125

மேலே