அன்பென்னும் மனதிலே.....
அது ஒருவரின்
இறுதி சடங்கு...
வழி போக்கனாய்
வழி மாறியவன்
கணங்களில் கரைந்து
கலந்து கொண்டான்....
காட்சிகளில்,
இறந்தவனை
தானாகவே நினைத்துக் கொண்டு
வருந்தியவன்
கலங்கி நிற்பவர்களிடம்
கவனம் கலைந்தான்....
நிஜமான கவலை
நிதானமான அமைதி
படபடத்த உடல்
ஒடிந்து கிடக்கும் சிறகு....
காற்றில்லாத கானகமாய்
சபிக்கப்பட்ட காற்றடுக்காய்.....
வீடெங்கும் நிறைந்து கிடந்த
விந்தை மனிதர்களில்
கண்ணீர் வாசம்....
சட்டென முடிவெடுத்த பொழுதில்
இறந்தவனை எழுப்பி விட்டு
தான் போய்
படுத்துக் கொண்டான்...
இப்போது இறந்த
இவனின் முகத்தில்
கடவுள் மொய்த்துக்
கொண்டிருந்தார்,
ஈக்களாய்........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
